இது பன்னீரைவிரும்பி உண்பவர்களுக்கு மட்டுமின்றி கட்டாயமாக அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு வகை என்றால் அது பன்னீர் தான். பொதுவாக பன்னீர் கொண்டு செய்யப்படும் அனைத்து உணவுகளுக்கும் உணவு பிரியர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு உண்டு என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது பன்னீரை கொண்டு வித்தியாசமாக செய்யப்படும் பன்னீர் 65 மசாலா. இது பன்னீரை விரும்பி உண்பவர்களுக்கு மட்டுமின்றி கட்டாயமாக அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
இதை நாம் நூடுல்ஸ்கள், சப்பாத்தி, நான், புல்கா, மற்றும் ஃபிரைட் ரைஸ்களுக்கு சைடிஷ் ஆக உண்ணலாம். வெறுமனே ஒரு மாலை நேர சிற்றுண்டி ஆகவும் உண்ண இவை மிகவும் உகந்தது. நாம் வழக்கமாக மாலை நேரங்களில் உண்ணும் சிற்றுண்டிகளுக்கு அல்லது டிபன்களுக்கு இவை ஒரு அருமையான மாற்றும் கூட. மேலும் நம் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் அவர்களும் இதை மிகவும் விரும்பி உண்பார்கள்.
இதன் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். நாம் வழக்கமாக செய்து உண்ணும் பன்னீர் உணவுகள் உங்களுக்கு சலித்து போய் இருந்தால் இந்த பன்னீர் 65 மசாலா தான் நீங்கள் அடுத்து செய்ய வேண்டிய பன்னீர் சார்ந்த உணவாக இருக்க வேண்டும்.
இப்பொழுது கீழே பன்னீர் 65 மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
பன்னீர் 65 மசாலா செய்ய தேவையான பொருட்கள்
- 300 கிராம் பன்னீர்
- 4 மேஜைக்கரண்டி சோள மாவு
- 3 மேஜைக்கரண்டி மைதா மாவு
- ½ கப் தயிர்
- 2 பச்சை மிளகாய்
- 4 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு
- 2 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி
- 1 மேஜைக்கரண்டி கடுகு
- 2 to 3 காய்ந்த மிளகாய்
- 1 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்
- 1 மேஜைக்கரண்டி சீரக தூள்
- 1 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- 1 மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்
பன்னீர் 65 மசாலா செய்முறை
- முதலில் பன்னீர், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, ஸ்பிரிங் ஆனியன், மற்றும் கருவேப்பிலையை நறுக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் 3 மேஜைக்கரண்டி அளவு சோள மாவு, மைதா மாவு, கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு, ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி, நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை நன்கு கெட்டியான பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
- பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பன்னீரை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப அதில் பன்னீரை எடுத்து பக்குவமாக போட்டு அது நன்கு பொன்னிறமாகும் வரை அதை பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு அது வெடித்தவுடன் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், 3 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு, ஒரு மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி, மற்றும் கருவேப்பிலையை போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், ரெட் சில்லி சாஸ், சீரக தூள், மல்லி தூள், மற்றும் கரம் மசாலாவை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு தயிரில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை போட்டு அதை கரைத்து அதில் சேர்த்து அது நன்கு கெட்டியாகும் வரை அதை கிளறி கொண்டே இருக்கவும்.
- பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும். (50ml தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)
- அது கொதித்ததும் அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் பன்னீரை போட்டு அதை நன்கு பக்குவமாக கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனை சேர்த்து அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் பன்னீர் 65 மசாலா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.